படித்தவனும் படிக்காதவனும்
படிப்பது ஒரு நல்ல செயல்
படிக்க விழையும் நோக்கம்
ஓர் இயல்
படிக்க இயலாதது குறை
படிக்க வேண்டாம் என்ற எண்ணம்
வேறுபாடான வழிமுறை.
படித்தவனின் மேன்மை பெருமை
படிக்காதவனின் வெறுமை கொடுமை
மிகுதியான வேற்றுமை
படித்தவன் வெல்வான் என்ற நம்பிக்கை
படிக்காதவன் தோற்பான் என்ற பொதுவுடைமை
ஏட்டில் மட்டுமே .
படித்தவன் சோர்வடைகிறான்
படிக்காதவன் வெற்றியடைகிறான்
அவரவர் நேரம் பொருட்டு.