விழ விழ எழுவோம்
நித்தம்
உடைந்து உடைந்து
வலிகள்
சுமந்து சுமந்து
மண்ணில்
புதைந்து புதைந்து கிடந்தாலும்
ஒரு நாள்
முட்டி முட்டி
மோதி எழுவோம்
தட்டி தட்டி
தடைகள் உடைப்போம்
குதித்து குதித்து
எதிரிகளின் குருதி குடிப்போம்
வெடித்து வெடித்து
எரிமலையாய்
படையை தகர்ப்போம்
வீழ்வது எழத்தானே
விழ விழ எழுவோம்
புதிய சரித்திரம் படைப்போம்
தமிழர் நாம் என்று
உலகிற்கு உரைப்போம்