தாய் .. !

கருவறையிலிருந்து நான் கண்விழித்தது வரை ! உள்ளம் நிரம்பும் கற்பனைகள்
எனைப் பற்றி !
முப்பொழுதும் கரைந்தன எனை நினைத்து !
துயில் களையும் என் இம்சைகளையும் இன்பமாய் ஏற்றுக்கொண்டாள் !
தன் விருப்ப உணவையும் வெறுத்திருந்தாள் நான் வளர !
கலங்கரை விளக்கம் போல அவள் முகம் அதன் ஒளியிலேயே தவழ்ந்திருந்தேன் !
நிலவைக் காட்டி சோறூட்ட முனைவாள் ! நிலவு போல அவள் அருகே இருக்க
தூரத்தில் தெரிவதை நான் பொருட்படுத்தியதே இல்லை !
கரம் பிடித்து நடந்துவிட்டேன் அவள் கண் அசைவிலே !
நானும் மற்றவர்களைப் போலத்தான் "அம்மா" என்று பேசத்துவங்கினேன் !
உண்மையிலேயே அவளைத் தவிற வேறொன்றும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை !
பஞ்சு மெத்தையும் , மயில் இறகும் தர இயலாத சுகத்தை !
அவள் மடியில் நான் உணர்ந்தேன் !
அப்போது நினைத்திருந்தேன் அது தான் "சொர்க்கம்" என்று !
அப்போது மட்டும் அல்ல எப்போதுமே நான் உரைப்பேன் !
அது தான் "சொர்க்கம்" என்று !
"மரணமும் மன்னிக்கும்" குணமுடையவள் என் "தாய்" !!!!!

.........ஆக்னல்........

எழுதியவர் : ஆக்னல் பிரடரிக்.ப (14-Oct-13, 8:08 am)
பார்வை : 225

மேலே