.....வைகைக் கவி வைரமுத்து.....

( கவிப்பேரரசு வைரமுத்துவின்
ரசிகர்களுக்கு சமர்ப்பணம் )

என் ஆசைக் கவிஞன்!
அழகுத் தமிழில்,
அற்புதம் செய்யும் அசுரன்!
கவிதைகளின் காதலன்!

வைகை முனையிலே,
பூத்ததிந்த பூகம்பம்...
அகரத்தமிழ் மட்டுமே,
அறிந்ததந்த ஏகாந்தம்...

வைகரை மேகத்தில்,
வண்ணமதை துவங்கியவன்...
வானெங்கும் வழி செய்து,
வெற்றிந‌டை போடுகிறான்...

மின் காந்தக் குரல் கொண்டு,
மேடைகள் அலங்கரிப்பான்...
தேனூறும் கவியாலே
தேகமெங்கும் மெய்சிலிர்ப்பான்...

ராகத்தில் அடி சேர்த்து,
தாளத்தில் முடி சேர்த்து,
சினிமாவில் சீர் கவிதை,
பாடல்கள் ஏற்றி வந்தான்...

கம்பரின் வரிசையிலே...
கண் கண்ட கவி வேந்தன்...
கற்பனைக்கோ எல்லையின்றி...
கவி பாடும் பொருள் வேந்தன்...

தண்ணீர் தேசத்தில்!!!
தாருமாறாய் மனம் பிடித்தாய்...
வில்லோடு வா என்று!!!
நிலவையும் நீ அழைத்தாய்...

தொடரட்டும் உன் தேடல்...
வளரட்டும் மொழிப்பாடல்...

எழுதியவர் : தோழமையுடன் ஹனாப் (14-Oct-13, 8:41 am)
பார்வை : 69

மேலே