நிரந்தர நினைவுகள். (மெய்யன் நடராஜ்)
நான் நெனைச்சத
நீ நெனைச்சதா
நான் நெனைச்சிருந்தேன்.
நான் நெனைக்கல
நான் நெனைச்சத
நீ நினைக்லன்னு
நீ நினைச்சத
நான் நினைச்சதா
நீ நினைச்சிருந்த
நீ நினைக்கல
நீ நினைச்சத
நான் நினைக்கலன்னு
நீ நினைச்சதும்
நான் நினைச்சதும்
நாம் நினைச்சதில்லே..
நீ நினைக்கவும்
நான் நினைக்கவும்
அவன் நினைச்சிருந்தான், (அவன் கடவுள்)
நாம் நினைச்சத
நாம் நினைச்சிட
அவன் நினைச்சிருந்தா
நீ நினைச்சதும்
நான் நினைச்சதும்
நினைவில் நிலைச்சிருக்கும்
உன் நினைப்புக்கும்
என் நினைப்புக்கும்
ஒரு நினைப்பிருந்தா
உன் நினைப்பையும்
என் நினைப்பையும்
அது நினைச்சிருக்கும்
உன் நினைவுக்கும்
என் நினைவுக்கும்
ஒரு நினைவாஞ்சலி
உருவாகிடும்
நிலை வருவதை
அது தடுத்திருக்கும்.
நீ என்னை நினைப்பாய் என்று
நினைத்த நினைப்பை
நீயும் என்னை
நினைக்கலையே என்னும்
நினைப்புக்குள் தள்ளியிருக்காது
நான் உன்னை
நினைக்கமாட்டேன் என்று
நீ நினைத்த
நினைவையும் அது கொன்று இருக்காது.
நினைச்சத ஏன்டா
நினைச்சோமுன்னு
நினைத்துக் கொண்டிராமல்
நினைச்சத மறந்து vaazhum
ninaivukali ninaiththu vaippom.
நம் நினைவினில்
இந்நினைவுகள்
நீங்கா நினைவுகளாய்
நமக்குள் இருக்கட்டும்
துயரத்தின் கனவுகளாய்
உறவினில் இணையா
கனவுகளாலே
நினைவினில் இணைந்த
நினைவுகளின் சங்கமம்
நினைவலைகள் அடிக்கட்டும்
நமது அந்தரங்கக் கடல்களில்!
அது நமது ஆத்மாவின்
நினைவுகளிலும்
ஒரு நிலையான நினைவை
நினைத்துக்கொண்ட நிரந்தரங்களாக.