கல்விக் கண் திறந்த கர்ம வீரர் காமராசர்

காமராசர் 1903 சூலை 15 ம் நாள் குமாரசாமி - சிவகாமி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். திண்ணைப் பள்ளியிலும், ஏனாதி நாயனார் வித்தியாவிலும் கல்வி பயின்றார். ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது பள்ளியை நிறுத்திக் கொண்டார்.

காமராசர் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார். 1954 ம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் ஆனார். இவர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். அவரது ஆட்சி காலத்திற்குள் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27000 ஆனது. அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பலனாக பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37% உயர்ந்தது.

காமராசர் ஒருமுறை சட்டமன்றத்திற்கு செல்லும் போது, மேலே உள்ள அறைக்கு செல்வதற்காக மின் தூக்கியில் (லிப்ட்) ஏறினார். அப்போது அங்கே வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த இளைஞர் கண்ணீல் கண்ணீருடன் காமராசரிடம் மனு ஒன்றை நீட்டினார். மனுவை வாங்கி பையில் வைத்து விட்டு, அவரிடம் என்னவென்று வினவினார். அந்த இளைஞன், தொழில் துறையில் இருந்து அரசாணை ஒன்று வந்திருக்கிறது, அதில் பத்தாம்
குறைவாக படித்தவர்கள் இங்கு பணிபுரிய அனுமதியில்லை என்று குறிப்பிட்டிருந்தது என்றான்.

அவனின் வலியறிந்த காமராசர் சட்டமன்றத்தில் நுழைந்ததும் கூறியது, ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் அரசாணையை பிறப்பித்தது யார், பொத்தானை அழுத்தினால் மேலே போகிறது, பொத்தானைஅழுத்தினால் கீழே போகிறது. இதற்கு எதுக்கு பத்தா
வது படிக்கனும். அவனாவது எட்டாம் வகுப்பு வரைப் படித்துள்ளான். ஆனால் நான் அது கூட படிக்கவில்லையே, அப்படி என்றால் எனக்கு மிந்தூக்கியை துடைக்கும் வேலைக்கூட கிடைக்காதே என்றாராம். அரசானைப் பிறப்பித்தவர் வாயடைத்து நின்றாராம்.

தன்னை இகழ்ந்து பிறரை உயர்த்திக் காட்டுகிறவனே உயர்ந்து நிற்கிறான். என்ற வேத நூலின் பொன்மொழிகளிக்கு உதாரணம் நமது காமராசர் அவர்கள்.

இப்படிப்பட்ட ஒரு மனிதருள் மாணிக்கமான காமராசர் அவர்கள் 1975 அக்டோபர் 2 ம் நாள் மறைந்தார். இன்று உலகத்தில் நீங்கள் ஒருவராக இருக்கலாம். ஆனால் யாரேனும் ஒருவருக்கு நீங்களே உலகமாக இருக்கலாம்.
இந்த வரிகளுக்கு முழுவதும் பொருத்தமானவராக வாழ்ந்து சென்றிருக்கிறார் தன்னலமற்ற தலைவர் காமராசர்.

எழுதியவர் : muhammadghouse (16-Oct-13, 10:01 am)
பார்வை : 4689

மேலே