என் நெஞ்சம் ஆனது ஒரு வெட்டிக்காகிதம் !

என் நெஞ்சம் ஒரு வெள்ளைக் காகிதம் !
உனைக் காணும் வரையில் !

அதுவே ஒரு கவிதைப் புத்தகம் !
உன்னிடம் பேசும் வரையில் !

அதுவே ஆனது ஒரு காதல் ஆலயம்!
நீ வந்து வசித்த வரையில் !

பின்பு அதுவே ஆனது ஒரு வெட்டிக்காகிதம்
என்னையும் சேர்த்து நீ கசக்கி எறிந்த பிறகு !

எழுதியவர் : மணிகண்டன் குரு (17-Oct-13, 12:22 am)
பார்வை : 103

மேலே