நினைவுகளின் பூக்கள் - 1

காதல் கவிதை
~~~~~~~~~~~~~~

உன் பெயரை
உச்சரிக்க நாவில்
உருவாகிறது
கரும்பு பானகமாக
என் எச்சில்..

உனை நினைத்து
படுக்கையில்
படுக்கை விரிப்பும்
சூடேறுகிறது
உன் எண்ணத்தில்...

காதல் காதல் என்றேன்
காதில் உனக்கும்
கேட்கும் கருவி வேண்டுமோ?

அன்பே !
காதல் காதல் என்றே
காதல் தீயில்
ரத்தம் கொதிக்கும்
சத்தம் கேட்கவில்லையோ ?

உயிர்மெய் எழுத்துக்களில்
உயிர்”மை” ஊற்றி
உரிமை காதலை
உயிர்காதல் கவிதையாக
எழுதி கேட்கிறேன்..

உயிரே ! உன்
உறவாக உன்
உற்றவனாக
காதலனாக
எனை ஏற்றுக்கொள்வாயா ?

உன் பித்தனாக
கேட்கிறேன்
கேளடி பெண்ணே
என் இதய ஒலிப்பரப்பில்
உன் பெயரை....



........இளமை திமிரில்
........எழுதிய கவிதை
........இப்பொழுதும்
........வாடாத மலராக
........என் நினைவுகளில்....

(நினைவுகள் தொடரும்..........)


-----------------------------> இரா. சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (18-Oct-13, 1:28 am)
பார்வை : 244

மேலே