என் இரவின் விசும்பல்கள்

நீர் வீழ்ச்சியில் ஏற்றமாய்
படகோட்ட எண்ணுகிறேன்,
பாவலன் நான் பாவமென‌
கேட்டவர்கள் கேலி செய்தர்...

சமூகம் எனும் சாக்கடையை
சலவைக்கு நான் எடுத்தேன்,
அரும்பு மீசை வளர்வதற்குள்
அவசரமேன்? ஆதங்கித்தர்...

செய் தொழிலே செப்பமென‌
சொப்பணங்கள் கண்டு வந்தேன்,
காவிரியில் குளித்து விட்டு
கடலுக்குள் ஏன் வேலையென்றர்...

அனாதையென வந்தோரை
அனந்தரமாய் ஆக்கி வந்தேன்,
"பிச்சைக்குப் பிள்ளையுண்டு"
விளம்பரம் செய் லாபமென்றர்...

அனுபவமே அறிவுரையாய்
அறிந்தவனை மாற்றி வந்தேன்,
அரசியலில் குதித்து விடு
பிரச்சாரம் வெல்லும் என்றர்...

அடுத்தவனின் ஆசைக்கு
நான் ஒன்றும் அடிமையில்லை...
என் வாழ்க்கை, என் பாதை,
ஏன் எதற்கு கவலையென்பாய்!!!

எழுதியவர் : தோழமையுடன் ஹனாப் (21-Oct-13, 9:52 am)
பார்வை : 213

மேலே