உலகை காக்க யுத்தம் தவிர்ப்போம் உயிரை காக்க இரத்தம் கொடுப்போம்

இரத்தமின்றி பல உயிரும்
இரக்கமின்றி இறக்குதே !
உதிரமின்றி பல உயிர்கள்
உயிர் பலிகள் ஆகுதே !

உதிரமின்றி உயிர் பூக்கள்
உதிர்ந்த பூக்கள் ஆகுதே !
உயிர் துளிகள் தந்து வாழ்ந்தால்
உயிர் பலிகள் ஆகுமோ?

உதிரம் தந்து உயிர் கொடுப்போம்
உயிர் கொடுக்கும் தோழரே !
உயிர் என்றால் உயிர் வேண்டாம்
உதிரம் போதும் நண்பரே !

கோடி மக்கள் உடனிருந்தும்
உயிர் கொடுக்க முடியுமோ!
கோடி மக்கள் குடியிருந்தும்
குடிக்கும் மக்கள் அதிகமோ !

நாட்டு மக்கள் நலம் வாழ
நாம் கொடுப்போம் உதிரமே !
நம் உதிரத்தால் உயிர் வாழ
உதவிடுவோம் தோழரே !

வாழும் போதே வாழ்வளிப்போம்
குருதி யெனும் கொடையிலே!
வருங்காலம் நலம் வாழ
வழி வகுப்போம் வள்ளலே !

நல் வாழ்வு நாம் வாழ
நாம் கொடுப்போம் உதிரமே !
நாட்டு மக்கள் நலம் கருதி
நாம் தருவோம் குருதியே !

யுத்தத்திலே இரத்தம் சிந்த
துடி துடிக்கும் நண்பரே !
துடிக்கும் உயிர் துளிர்த்திடவே
துணை செய்வோம் தோழரே !

உலக மக்கள் உயிர் வாழ
உயிர் கொடுப்போம் யாவரும்
உதிரத்தால் ஒன்றினைவொம்
உலக மக்கள் யாவரும்

உலகை காக்க யுத்தம் தவிர்ப்போம்!
உயிரை காக்க இரத்தம் கொடுப்போம் !

எழுதியவர் : அழகர்சாமி சுப்ரமணியன் (அ. (21-Oct-13, 9:52 am)
பார்வை : 849

புதிய படைப்புகள்

மேலே