மேலுயர்ந்து நிற்கிறான்
அடர்த்தியான மரங்கள் நிறைந்த என் தோட்டம்
பச்சை பசேலென்று தோன்றிய என் தோட்டம்
சடாரென்று வெள்ளையாக மாறிய என் தோட்டம்
என்னைப் பார்த்தவுடன் விம்மியது.
என்ன ஏது என்று புரியாமல் நான் விழிக்க
அதின் மீது வடிந்த வெள்ளைத் துகள்களைப் பார்க்க
நெஞ்சைப் பிளந்த துக்கத்தை மறைக்க
திரும்பினேன் அடுத்த பக்கத்தை நோக்கி
.
ஆழ கிணறு ஒன்று தோண்ட பட்ட நிலையில்
அன்று ஒரு நாள் நான் இல்லாத வேளையில்
வெள்ளை மணல் சிதறி மரங்களில் சேர
வெள்ளைப் போர்வையால் சுற்றப்பட்ட மரங்கள்
தோரணை நீண்ட நாட்கள் நீடிக்க
மழையும் பெய்யாமல் வாட்ட
அழகிய தோட்டம் பாழாகிப் போக
வேதனையுடன் குலுங்கி நிற்கிறேன் .
கட்டம் கட்டும் பொறி யாளனோ
எல்லா வரைமுறைகளையும் மீறி
கொடுக்க வேண்டியவர்களுக்குக் கொடுத்து
மேலுயர்ந்து நிற்கிறான் வருமானத்தோடு.