கல்லூரி காலம்

கல்லூரி சென்ற முதல்நாளே
கலையவில்லை நினைவுகளிலிருந்து
அதற்குள் நெருங்கிவிட்டது
இறுதியாண்டின் இறுதிநாட்கள்..,..

கண்களில் கனவுகளுடன் தொடங்கியது
இளமையின் இனிய சிறகுகள்
இன்பமாய் பறக்க தொடங்கியது
எல்லையில்லாமல்........

தாய்க்கும் சேய்க்கும் உள்ளஉறவு கூட
வலியில் தான் பிறக்கிறது .ஆனால்
நட்பு புன்னகையில் பிறக்கும் பூ
வாடாமல் பூத்திருக்கும் பூ....

ஆண் பெண் அறியாத நட்பு
அகத்தால் வளர்த்த நட்பு..
காதல் மலர்ந்தாலும்
காத்திடும் கண்ணியம் அழகாய்...

கல்லூரி காலங்களில்
காலையும் மாலையும் என
தினம்தோறும் தேர்த்திருவிழாதான்
கல்லூரி பயணங்களில்.....

கல்லூரியின் மூளை
எப்படி ஆனதோ தெரியவில்லை....
ஆனால் சத்தியம் சொல்கிறேன்..
இதயம் நட்பில் ஆனதே.....

இறுதி தேர்வுகள் நெருங்கினாலும்
அச்சம் என்னவோ பிரிவைபற்றிதான்.
பிரிந்து சென்ற நட்புகூட
புரிந்துகொண்டு சேர்க்கிறது...

செய்முறை தேர்வு, மாதிரி தேர்வு என
அடுக்கடுக்காய் ஆயிரம் வேலைகள்
பேசிடக்கூட நேரமில்லை...
ஆனாலும் பேசிக்கொள்கிறோம்...

யாரோ சொன்ன வரிகள்,
நண்பர்களோடு சிரித்ததை எல்லாம்
நினைத்து பார்த்தால் அழுகை வரும்
அன்று புரியவில்லை,இன்று உணர்கிறேன்....

எழுதியவர் : இலக்யா.. (25-Oct-13, 11:00 am)
Tanglish : kalluuri kaalam
பார்வை : 517

சிறந்த கவிதைகள்

மேலே