தமிழர்களின் பொங்கல் வாழ்த்துக்கள்!

மண்ணெடுத்து பானை செய்து
மறக்காமல் தட்டி பாருங்கள்
மாவீரன் இரத்தமெல்லாம்
மறக்காமல் சிவந்ததனால்

ஊறிய மண் என்பதால்
உரமாய் தரமாய் சத்தமாய்
சொல்லிய சொல்லில் ஈழமாய்
சுதந்திர பொங்கலில் வீரமாய்

பொங்குவோம் பொங்குவோம்
புது பொங்கலில், இந்த பொங்கலில்

கரும்புடன் வாழையாய் கலந்து நாம்
கதிருடன் விளைச்சலாய் முதிர்ந்து நாம்
மஞ்சளிலும் இஞ்சியிலும் மறைந்து நாம்
மா பசு காளையிலும் சேர்ந்து நாம்

பொறுத்தது பூமியில் எதற்கென
புரியுமே காலத்தில் நடக்குமென
கும்மிகள் கொட்டித்தான் பாட்டிசைத்து
கொண்டாடுங்கள் என்றுமே மகிழ்கின்றோம்


எழுதியவர் : . ' .கவி (13-Jan-11, 6:53 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 487

சிறந்த கவிதைகள்

மேலே