காதல் இதுதானோ-2

குறுஞ்செய்திகள் அனுப்புவான் அவன்.. ஒவ்வொன்றின் முடிவிலும் செல்லமே என்றிருக்கும்.. கோபம் கொண்டாள் மது..

"இப்படி அழைப்பதாய் இருந்தால் என்னோடு பேசாதே" என்றாள்..

அவனும் சம்மதிப்பான்.. பின்னர் சத்தியம் மீறுவான்.. காரணம் கேட்டால் சத்தியங்கள் உடைக்கப்பட வேண்டும் என்பான்..

நிபந்தனை வைத்தாள் அவள்.. ஒரு நாளில் 5 நிமிடங்கள் பேசினால் போதும் என்று.. அவனும் தலை அசைப்பான்.. ஆனால் கைபேசியில் அழைப்பு காசில்லாமல் தீரும் வரை பேச வைப்பான்..

என்ன கூறி மறுத்தாலும்,

"நீ என்னை காதலிக்கவில்லையே பின்னர் ஏன் இந்த பயம்?" என்பான்..

தன்னை நிரூபிக்க அதுவே வழி என்று அவளும் அவன் விளையாட்டுகளை பொறுத்து கொள்வாள். காதலின் விளையாட்டுகள் தொடர்ந்தன..
படித்து கொண்டிருந்த மது கைபேசி சிணுங்குவதை கேட்டாள்.. கையில் எடுத்தாள்..

"ஹலோ மது!" உற்சாகமாய் அழைத்தான் அவன்.

என்ன பண்ணிட்டு இருக்க?

“படிக்கிறேன்..”

சாப்பிட்டியா?

“இல்லை டா... பசிக்கல..”

என்ன சொல்ற நீ? சாப்பிடாம என்ன படிப்பு வேண்டியிருக்கு? போய் சாப்பிடு..

“நேரம் ஆச்சு டா.. இனிமே மெஸ்ல சாப்பாடு இருக்காது..”

நான் கொண்டு வரட்டா?

“வேண்டாம்..”

நான் கொண்டு வரேன்..

“உன் வீடு எங்க இருக்குனு மறந்துட்டியா? நீ காலேஜ் வர 4 மணி நேரம் ஆகும்.. இப்போ மணி எட்டு ஆச்சு!”

உனக்காக என்ன வேணாலும் செய்வேன்.. நீ என் மனைவி என்றான்!

“தேவையில்லாம பேசாத”.. சீறினாள் மது.

தன்னை மயக்க என்னவெல்லாம் செய்கிறான் என்று மனதிற்குள் சிரித்தாள் மது. அவனால் நிச்சயம் முடியாது என்று தெரிந்ததால்,

"சரி கொண்டு வா.. எனக்கு பசிக்கிறது" என்றாள்.

அழைப்பு துண்டிக்கப்பட்டது.. தன் படிப்பை தொடர்ந்தாள் மது. மணி இரவு 9 ஆனது.. அவன் அவளை மீண்டும் அழைத்தான் கைபேசியில்..

"மது! கீழ இறங்கி வா.. சாப்பாடு கொண்டு வந்தாச்சு"
வாய் விட்டு சிரித்தாள் அவள்..

“நீ என்ன பறந்து வந்தியா? 4 மணி நேர பயணத்தை ஒரு மணி நேரத்தில் கடந்து வந்துட்டியே?”

எல்லாம் உனக்காக.. சீக்கிரம் வா!

“விளையாட்டு போதும்.. போய் தூங்கு” என்றாள்.


குறுஞ்செய்தி வந்தது.. “ஜன்னல் வழியே கீழே எட்டி பார்.. என் நண்பன் நிற்கிறான்..”

சந்தேகத்தோடு வெளியே நோக்கினாள் மது.. அங்கே கையில் உணவு பொட்டலத்தோடு ஒரு பையன் நின்றிருந்தான்.. அதிர்ச்சியில் உறைந்தாள் அவள்.. விழிகள் கலங்கின..

பொய் என்று நினைத்தோமே ஆனால் தன்னை நிரூபித்து விட்டானே என்று மனம் வெதும்பினாள்..

அவனை அழைத்தாள்.. “யாராவது பார்த்தால் வம்பு.. அவனை திரும்பி போக சொல்..”

“நான் சொன்னதுக்காக ஒரு மணி நேரம் அந்த காட்டுக்குள்ள பைக் ஒட்டி வந்திருக்கான் .. நீ போய் வாங்கிக்கோ..”

ஒவ்வொரு நாளும் அவள் மனதில் நுழைய வழி தேடினான் அவன்.. ஒரு நாள் வழியும் கண்டு கொண்டான்..

தொடரும் காதல் பயணம்.. :)

எழுதியவர் : மது (28-Oct-13, 11:39 am)
பார்வை : 242

மேலே