சிக்கி தவிக்கிறேன்

அன்று காலைப்பொழுது... சூரியனைக் கண்ட பனி, நாணத்தில் களையும் அந்த வேலை... ஒரு பூச்செண்டை அவள் முன் நீட்டினேன்... அவள் கண்களில் ஒரு வித சலனம்.. பேருந்தின் வருகை சத்தம் கேட்டதும், உயிர் பெற்ற பதுமையாய் சிலிர்த்து நின்றாள்... வந்த பேருந்தில் ஏறி அமர்ந்தாள்... அதுதான் அவளை நான் கடைசியாக கண்டது... அவள் விழிகளில் தெரிந்த அந்த வார்த்தை, இன்னும் என் ஞாபகத்தில்...

கல்லூரியும் முடிந்தாயிற்று... இனி அவளைக் காண வாய்ப்பும் அதிகம் இல்லை... இருந்தும் அவளுக்காக காத்திருந்தேன், ஒரு சிசுவைக் காண துடிக்குக்கும் தாயைப்போல...

என் மனம் நீ காண, நானொரு வழி செய்தேன்..
பெண்ணே நீ என் வழியில் கூட வரவேண்டாம்..
நான் செய்த வழியையாவது பார்துசெல்...
உன் பார்வை ஒன்றே போதும் என் ஜீவன் எந்நாளும் வாழும்...

உன் நினைவில் சிக்கி தவிக்கிறேன்... ஏதேதோ ஆசைகளின் உருவத்தை கொண்டு வாழும் எனக்கு உன் வார்த்தை கேட்க்க அந்த ஆசை எல்லாம் இதில் அடங்கிவிடும்...

மலரும் மலராக நீ சிரித்தால், என் வாழ்வின் விடியல் அதில் தொடங்கும்... தென்றலின் தேர்வும் நீயென, உன்னில் இருந்து நான் அறிந்தேன்...

என்றும் மாறாத வானம், என் காதல்... நீ சொல்லும் ஒரு சொல்லே நம் வாழ்வின் தேடல்.. அன்று உன்னை நான் கண்டதாலும், என்னுள் நீ கரைந்ததாலும் என் மனம் நான் உனக்கு தருகிறேன் இன்று....

இன்றும் என் நினைவில் உன் பார்வையின் முதல் சாரல்... கல்லூரி நாட்கள் கற்பூரமாய் கரைய... அந்த அடையாளம் மட்டும் என் மனதின் சுவர்களில்.... உன்னிடம் என் ஆசை சொல்ல, எனக்கு கிடைத்த நேரம் நம் பிரிவின் கடைசி சில நொடி பொழுதுகள்...

நீ என்னைப் பார்க்க வருதை அறிந்த என் மனம் தடுமாற்றத்தின் உயரத்தைத் தொட்டது... என் கண்களுக்குள் இருக்கிறது, உன் கண்கள்... உன் சிரிப்பின் ஒசைக்கொண்டு உன் வருகையை அறிந்தேன்... உன்னை நெருங்க பல தடைகளை அமைந்தவைகளை தாண்டி வந்து தேவதை உன்னிடம் வரம் ஒன்று கேட்டேன்...

உன் நினைவுகளையும், ஒரு சில அறிகுறிகளையும் கொண்டு உன்னை நான் தேட, இருளில் ஒளிந்திந்துக்கொள்ளும் என் நிழலை போல் ஆனாய்...

வழியேதும் இன்றி, என் வலிகளை மறந்து(மறைத்து) திருமண பந்தலில் அமர்ந்தேன்... ஒரு சிரிப்பின் சத்தம்... மனத்துக்குள் அன்று பெய்த முதல் சாரலின் துளிகள், இன்று இன்னும் அதிக குளிர்ச்சியாக... சற்று பார்வை உயர்த்தி கண்டதுதான் ஞாபகம் இருக்கிறது... பின்பும் நடந்தது கனவா இல்லை நினைவா என்பதை என் கையை பற்றியதும் தான் தெரிந்தேன்... என் கரம் பிடித்த என் சகி, நீதான் என்று...

என் வாழ்வின் தேடலுக்கான முடிவை உன்னிடம் கண்டு கொண்டேன், நம் திருமணத்தில்...

எழுதியவர் : அஸ்லூனா (28-Oct-13, 2:50 pm)
Tanglish : sikki thavikkiren
பார்வை : 252

மேலே