தவறு செய்த மகனின் சமர்ப்பணம் தந்தைக்காக

கண்விழித்து கண்விழித்து தூக்கம் போச்சே
கண்முழுக்க கண்ணீர் ஆச்சே........

காலம் வரைந்து வைத்த ஓவியமா
நான் கண்ணீர் விட காரணமா.........

காலன் பிடியால் மாட்டி தவித்தேன்
அது கனவாக கரையும் தருணத்தில்
பின் வரும் காலம் எண்ணி ஏங்கிதவித்தேன்.........

கண்களை கட்டியபின்
கார்மேகம் சூல என்னைச்சுற்றி இருட்டு
அதை விட்டு மீண்டு வந்ததே பெரும் பொருட்டு.......

மூன்று எழுத்தில் இரு உயிர் இருக்கும்
அவைகளை உச்சரிக்கும் வாயினுள் இனி மெயிருக்கும்......
ஆனாலும் கூட மௌனம் என்ன!

பால்நிலா தேய்கிறதே என்று வெறுப்பதுண்டோ
அதுவே வளரும் போது வரவேற்பதுண்டே
அதை அறிந்தும் மௌனம் என்ன

இப்படிக்கு
அன்பிற்காக மடியதுடிகும் மனது

எழுதியவர் : ரெ. அருண் குமார் (31-Oct-13, 7:11 pm)
பார்வை : 54

சிறந்த கவிதைகள்

மேலே