தீபாவளி வாழ்த்துக்கள்

அன்பெனும் அலைகடலில்
அகமகிழ நீந்திடவே நாம்
பண்பெனும் படகினிலே
பாசமெனும் துடுப்புடனே
நேசமுள்ள நெஞ்சுடனே
பணிவு ஈகை இரக்கமெனும்
நண்பர்களுடன் பயணித்தால்
வாழ்க்கையின் சுகத்தையும்
எதிரி எனும் சுனாமி ஆனாலும்
என்றும் நம்மை வீழ்த்தாது
புயலும் தென்றலாய் வருடும்
அலைகளும் நமை தாலாட்டும்
மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுக்கும் !
தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும்
என் இனிய வாழ்த்துக்கள் !!!!!!!!!!
பழனி குமார்