காத்திருப்பு

முதல் பார்வை கடந்திட
முழுதாய் முதல் மாற்றம் !!
தடுத்திடும் எண்ணமில்லை
தவறி உன்னில் விழும் கவலையுமில்லை!!
நீண்டு செல்லும் கனவின்
முதல் நிறுத்தம்
உன் குரல்!!
சூழ்நிலைகளின் பரிமாற்றம்!!
எண்ணங்களின் பரிமாற்றம்!!
அவை தாண்டிய மனதின் பரிமாற்றம்!!
கண்கள் செய்த பதிவு!
சொல்ல மறந்தவை!
புன்னகையில் தொலைத்தவை!
இவை அனைத்தையும் மிஞ்சிய
மனதின் வருடல்!!!!!
நம் சந்திப்பு
அறியாமல் துவங்கியவையல்ல!!
புரியாமல் முடிக்கப்பட்டவை!!!!!
காலம் கேட்கும் கேள்விகளுடன்
என் காத்திருப்பு தொடர்கிறது
உன் பதிலுக்காக!!!!