நான் வாழ்ந்த புரம்
மழைக்கிளி தேடிடும்
மயில்வனம் ஆடிடும்
புரம்
மாலையில் மையிட்டுவரும்
அழகிய சிட்டுக்கள்
சாலையில் கை வீசிட்டுவரும்
மெல்லிய மொட்டுக்கள்
மத்தியில் உள்ள வீட்டை
சுற்றியில் மரசெடிகள்
நம்மை ரசிக்கும் அழகு
பங்குனியும் பௌர்ணமியும்
இணைந்த அழகு
ஏற்றம் இரைத்து வளர்த்த
பயிர்
ஏற்ற தாழ்வு இல்லாது
சமன்
இரவு போர்வை போர்த்தி
பௌர்ணமி நிலவை ரசிக்க
மாண்டிடும் வாண்டுகள்
கண்விழிக்கும் நேரத்தில்
கனவு சொல்லும் சிதம்பர
ரகசியம்....

