தீபாவளித் திருநாள் வாழ்த்து

தீபாவளித் திருநாள் வாழ்த்து!!!
============================

இருந்து கெடுத்தான் மக்களையே - நரகாசூரன்
இறந்து கொடுத்தான் திருநாளினையே
இறந்தும் இன்னும் வாழுகின்றான்
தீபாவளித் திருநாள் அவன் தினமே!!!!

இறந்த தினமும் திருநாளாய்
இந்திய மக்கள் கொண்டாடும்
தீபாவளித் திருநாளன்றி வேறேது??
இத் திருநாள் இன்பம் திகட்டாது!!!

புத்தாடையுடனே புன்னகையும்
இனிப்புடன் மகிழ்ச்சி பரிமாற்றங்களும்
விடியலின் முன்னே ஆரம்பம்
வெடிச்சத்த முடன் திருநாள் ஆனந்தம்!!!

ஆலயம் சென்று வழிபாடு - நன்னாளினில்
சுற்றம் கூடல் பிற்பாடு
விதவிதமான பட்சணங்கள்
வீடுகள் தோறும் பங்கீடு!!!

சிறுபிள்ளை செலுத்துவர் ராக்கெட்டு
பெரியவர் கொளுத்தியும் மகிழ்வர் மத்தாப்பு
குழந்தைகள் பெரியவர் என்றில்லை
கொண்டாட்டதிற்கே அளவில்லை!!!

ஒவ்வொரு இல்ல வாசலிலும்
ஒளிரும் தீபம் வரிசையிலே
குதூகலம் படைக்கும் தீபாவளி
அனைவர் வாழ்வில் ஏற்றும் தீப ஒளி!!!

ஆண்டிற்கொருநாள் தீபாவளி
கொண்டாடி மகிழும் மானிடரே
தன்னம்பிக்கையுடனே உழைத்திடுங்கள்
தீபாவளி வாழ்வில் தினம்...தினமே!!!

புறத்தினில் வாழ்ந்த நரகாசூரனையே
வதத்தில் அழித்தான் கண்ணனுமே
மனதினில் நஞ்செனும் அசுரனையே
அழித்தே அடைவோம் நற்பேரினையே!!!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அனைவருக்கும் என் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்.

அன்புடன்,
சாந்தி

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
(குறிப்பு - இந்தியாவிலேயே தீபாவளித் திருநாள் கொண்டாடப் படாத மாநிலம் கேரளா)

28-07-2013 அன்று "தமிழன்" தொலைக் காட்சியில் இலக்கியச் சோலை நிகழ்ச்சியில் ஒளிபரப்பான கவிதை இது. இது போன்று இன்னும் 3 பண்டிகைகளுக்கான கவிதைகள் (பொங்கல், ரம்ஜான் மற்றும் கிருத்துமஸ்) இலக்கியச் சோலை குழுவில் உள்ள கவிஞர்களால் அன்றைய தினம் வாசிக்கப் பட்டது. )

எழுதியவர் : சொ. சாந்தி (1-Nov-13, 5:14 pm)
பார்வை : 10820

மேலே