பொருத்தம் பத்து
பொருத்தம் பார்த்தார்கள்
பொருந்தியது பத்தும்
செயதார்கள் திருமணத்தை
சாதகத்தில் பொருந்திய
பத்து பொருத்தங்கள்
வாழ்க்கைக்கு பொறுப்பேற்கவில்லை
பத்தும் பதிவேட்டில் பொருந்த
வாழ்வு ஏட்டில் விலக
பற்றிக்கொண்டது விவகாரம்
ஆணின் கை ஒங்க
பெண்ணின் சினம் பொங்க
முற்றியது சண்டை
ஆணவம் தலை தூக்க
அடங்காமை தலை விரித்தாட
வேறுபாடு சென்றது நீதி மன்றம் .
ஆண்டுகள் பலவாக ஓட
வயதும் கூட அதனுடன் விரைய
பிரிவும் நிரந்தரமானது
மறு முறை திருமணம்
வேகமாக அரங்கேற
அறுத்துக் கட்டுவது வழக்கமானது
அன்று சாதகம் சொன்ன
பொருத்தங்கள் அனரத்தமாக போக
மண முறிவு ஏற்பட்டது.
இன்று பொருத்தம் பார்க்காத
இரண்டாம் கல்யாணம்
மன ஒற்றுமையை உண்டுபடுத்துகிறது .
என்னவென்று சொல்லப் புரியவில்லை
ஏன் என்று அறிய முடியவில்லை
எப்படி என்று தெளிய இயலவில்லை