அவள் இன்றி நான் இல்லை
தென்றலாய் நடந்து சென்றவள்
நின்றிட்டாள் -என்னை
திரும்பி பார்த்திட்டாள் -குளிர்
புன்னகையை சிந்தி -இதயத்தை
கொன்றிட்டாள் - அருகே
வா என்று அழைதிட்டாள்
கண் அசைவில் ஆயிரம்
கவிதைகளை அள்ளித்
தந்திட்டாள் பின் சென்றிட்டாள்
தினமும் கனவில் வந்திட்டாள்
தமிழ் அமுதை தந்திட்டாள்
பருகச் சொல்லி வாரி என்னை
அணைத்திட்டாள் - பருகும் போதே
புதிது புதிதாய் சொல்லி கொடுத்திட்டாள்
அவள் சொல்லி கொடுத்தது
கரும்பின் சுவை என்பேனோ ....?
தேனின் சுவை என்பேனோ ........?
பசும் பாலின் சுவை என்பேனோ .?
அன்று முதல் மலர்ச் சோலையில்
சுற்றித் திரியும் வண்டானேன்
கொட்டும் குளிர் அருவியில் குளிர் தென்றலானேன் - புதுப்
பாட்டிசைக்கும் கவிக் குயிலானேன்
இனிக்க இனிக்க இன்பம் தந்தாள்
இதயம் முழுக்க அவளே நின்றாள்
சென்ற இடமெல்லாம் வெற்றியே
தந்தாள் - என் சிந்தனையில்
சுகமாய் நின்றாள் - இனி அவள்
இன்றி நான் இல்லை - நான்
இன்றி அவள் இல்லை - யார் அவள் ..?
அவளே என் தமிழ்க் காதலி ................!