+யக்கா யக்கா+

யக்கா யக்கா வாழைக்கா
வாழ வைக்கும் காயக்கா
கைவிரல் போன்ற வெண்டைக்கா
கணக் குக்கான காயக்கா

சாலையில் உடைக்கும் சுரைக்கா
திருஷ்டி கழிக்கும் காயக்கா
ஆள் உயர புடலங்கா
பார்க்க பயமா இருக்குக்கா

சின்ன சின்ன அவரைக்கா
நல்ல சுவை கொடுக்குங்கா
நீள நீள முருங்கைக்கா
எல்லா ருக்கும் பிடிக்குங்கா

ஒல்லியாய் இருக்கும் கொத்தவரங்கா
குள்ளமாய் இருக்கும் கத்திரிக்கா
குட்டியாய் இருக்கும் சுண்டைக்கா
குண்டாய் இருக்கும் பூசணிக்கா

காரம் கொடுக்கும் பச்சைமிளகா
கசப்பை கொடுக்கும் பாகற்கா
இனிப்பாய் கிடைக்கும் பரங்கிக்கா
புளிப்பை அளிக்கும் மாங்கா

எல்லாக் குணமும் இருக்கின்ற‌
காய்கள் அனைத்தும் நன்மையே!
சத்து கொடுக்கும் காய்களை
நாளும் உண்போம் உண்மையாய்!

காய்கள் போல மனிதனும்
குணத்தில் பலவகைகள் தான்!
முடிந்த வரைக்கும் திருத்துவோம்!
முடியா விட்டால் மன்னிப்போம்!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (3-Nov-13, 10:07 pm)
பார்வை : 104

மேலே