காதல் கிரீடம்
எந்த ஒரு மனிதன்
தன்னின் தலையில்
காதலை கிரீடமாக சூடிகொள்கிறானோ
அவனின் பாதம் சொர்கத்தை நோக்கி
பயணிக்கிறது!
தீபத்தை தலைசூடிய மெழுகாய்
பிரகசிக்கவும் செய்கிறான்
உருகவும் செய்கிறான்!
திடநிலை மனிதன் மேல்
காதல் சூரியனின் ஒளிபட்ட உடன்
நீர்மநிலையாகி பிறகு
வாயுநிலையாகி மேல்நோக்கி
உயர்ந்து போவான்!
தூக்கத்தை மறந்து,மறந்து
இமையதவன் ஆகிப்போவன்!
உண்ணா நிலையை பின்பற்றி
மெலிந்து,மெலிந்து
அழகிய முன்றாம் பிறை
நிலவாகிப்போவான்!
வார்த்தைகள் வாய் வழி தவிர்த்து,
கண்கள் வழியை தேர்ந்தெடுத்து
மௌன மொழியில்
பிதற்றல்கள் இல்லாமல்
அர்த்தமுள்ளதகவே வெளிப்படுத்துவான்!
காற்றையே காகிதமாக்கி,
கைகளை எழுதுகோல்லாக்கி
கவிதைகள் படைக்கும்
சக்தி கொள்வான்!
உண்ண உணவு
உடுத்த உடை
இருக்க இடம் மனிதனின் அடிப்படையாம்
இதோடு காதலையும் சேர்த்துவிட்டால்
மனிதன் மாமனிதன் ஆவது நிச்சயம்!