புத்தபூமியா யுத்தபூமியா
யுத்ததின் சத்தம்
வெகு அருகில்
ரத்ததின் வாடை
தெருவெங்கும்
கண்ணீரில் கதறும்
குழந்தைகளின் குரல்கள்
தரைமயமாக்கபட்ட வீடுகள்
பிணக்குவியலை சுமந்து
சுட்டுதள்ளபட்ட கற்பிணி
பெண்கள்
புத்தபூமி இன்று ரத்த
பூமியாய்
தனிப்பட்ட மனிதர்களின்
பதவி ஆசையால் அழிக்கபட்ட
தமிழர்கள்
களவாட பட்ட
கனவு உறக்கங்கள்
கண்டும் காணமலிருந்த
உலகநாடுகள்
ஆயுதங்களால் வெற்றி
நிலைப்பதில்லை
காந்திய வழியில்
சிந்தித்து கயவர்களை வென்றிடுவோம்