பகுத்தறிவு

மிதிபட்டு உயிரிழந்தோம்
ஜோதியை பார்த்து

விதியென்றே பேசி
நின்றோம் வீணாக

சதியா என்று விசாரணை
ஆரம்பம் அரசியலாய்

நிதியொன்றை அரசும்
அறிவிக்கும் வாக்குறுதியாய்

மதிதனை தான் மறந்தோம்
பகுத்தறிவு இல்லாமல்

பழி அதனை மறந்திடுவோம்
கடவுள் பெயரால்

விழி நீரால் குளித்திடுவோம்
களங்கங்கள் மறைய

இனியாவது திருந்திடுவோம்
கடவுளை மனதில்மட்டும் வைத்து

எழுதியவர் : சங்கர் ps (17-Jan-11, 10:48 pm)
சேர்த்தது : sankarps
பார்வை : 366

மேலே