இளவரசன் மரணம், இசைப்ரியா மரணம்,துப்புரவுக்கும் கொடுக்க வேண்டும் முகப்பு முக்கியத்துவம்
மாண்புமிகு எழுத்தே, எழுத்துதளமே நீ நினைத்தால் பேனா முனையை விட வேகமாக திட்டங்களை உருவாக்க மற்றும் சட்டமாக்க முடியும். இளவரசன் மரணம், இசைப்ரியா மரணம். ஆகியவற்றை நீண்ட நாள் எழுத்து முகப்பு பகுதியில் வைத்து முக்கியத்துவம் கொடுத்தது போல.. பிறந்த குழந்தையின் கழிவைகூட இடதுகையில் துடைக்கவும், துர் நாற்றமாகவும் நினைக்கும் இவ்வுலகில், பெற்று வளர்த்து பெரிய ஆளாக்கிய தந்தை,தாய், யாராகினும் முதுமை பருவத்தில் அவர்களின் மலத்தை துடைக்கவும், அவர்களின் உடலை துடைக்கவும் கூட இவர்களை பயன் படுத்த நினைக்கிறோம். அனைவரின் கழிவுகளையும் தூய்மை செய்து துப்புரவு பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு அதிக சலுகைகள் மற்றும் முக்கியத்துவம் கொடுத்து நம் மாநிலம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்க வைக்க இந்த கருத்தை எடுத்து செல்ல உன்னால் நிச்சயம் முடியும் என்பது என்னுடைய ஆராய்ச்சி உண்மை.