யாரோ இவன்

ஒவ்வொரு முறையும் புதிதாய்த்
தோன்றும் - என் கைபேசியில் இருக்கும்
அவனின் முதல் குறுஞ்செய்தி மட்டுமல்ல

நடுநிசியில் பரிமாறும் அந்த
மின்னஞ்சல் கவிதையும்

அவன் நினைவோடு பேசியவாறே
புன்னைகைக்கும் அந்த ஜன்னலோர
இலையுதிர்காலமும்.

வேண்டும் மீண்டுமென ஏங்கத் தூண்டும்
ஊடல் பின் தோன்றும் அந்த நெருக்கக் காதலும்

கண் சிமிட்டியவாறே என் கைக்குள் திணிக்கப்படும் உன் பரிசுப் பொருட்களும்

பேசிப் பேசித் தீர்த்த பின்னும்
பிரியும் போது கெஞ்சும் உன்
நீலக்கண் பார்வையும்.

என்னுள் கலந்த உன்னை எங்கெனத் தேடித் தேடி
இறுதியில் எங்கு தொலைத்தேனோ தெரியவில்லை என்னை உன்னில்.

உன்னையே அறியாமல் என்னை
உற்றுப் பார்க்கும் உன்னை
யாரெனக் கேட்டோர்க்கு
உதட்டைப் பிதுக்கியவாறே உதிர்த்தேன்
அந்த உயிரற்ற வார்த்தைகளை
"யாரோ இவன்" என்று.

எழுதியவர் : கார்த்திகா கிருஷ்ணன் (9-Nov-13, 11:43 am)
சேர்த்தது : karthiskva
Tanglish : yaro ivan
பார்வை : 219

மேலே