எனக்கே சொந்தம்
நீ கட்டியதென்னவோ
உயிரற்ற மஞ்சள் கயிறொன்டில்
கோர்க்கப்பட்ட தங்க தாலிதான்
அது கொடுத்தது என்னவோ
உயிருள்ள உன்னை எனக்கு
என்னில் ஓர் உயிரை நமக்கு.
இனி உன் உச்சந்தலை முதல்
உள்ளங்கால் வரை மட்டுமே
நீ எனக்கு சொந்தமல்ல......
நீ வேண்டாம் என்று
வெட்டி எறியும்
நகம் கூட
எனக்கே சொந்தம்.......
-PRIYAKARTHIKEYAN