பள்ளி வாகனமே
பள்ளி வாகனமே !
எம் பிஞ்சான வண்ண மலர்களை
பக்குவமாய் பள்ளிக்கு அழைத்துச் செல்....!
கவனமாக மெதுவாக ஓரமாக
சாலையோடு ஊர்ந்து செல் ...!
சாலையில் குண்டும் குழியும் இருக்கும்
அங்கும் இங்கும் பார்த்து செல்...!
உன்னை நம்பித்தான் தினமும்
சீராட்டிப் பாராட்டி எம் பிஞ்சுகளை
உச்சி முகர்ந்து அனுப்புகின்றோம்
நீ கவனமாகச் செல்...!
நீ அயர்ந்து தூங்கி விட்டால்
அவ்வளவுதான் அனைத்து
உள்ளங்களும் நொறுங்கிடுமே
மெதுவாக ஓட்டிச் செல்...!
அளவுக்கதிகமாய் குழந்தைகளை
நின்று நிதானமாக ஒலி எழுப்பி
நெல்லு மூட்டைபோல திணித்தும்
அள்ளிப் போட்டும் செல்லாதே..!
இமையான எங்கள் இதயங்களை
பொதி மூட்டைபோல மூச்சை
அடக்கிக் கொண்டும் ஏற்றிச் செல்லாதே..!
அளவுகதிகமாயும் மலர்களை ஏற்றாதே...!
உனது நான்கு கால்கள் பார்த்தும்
உன் முகம் நேர்மை பார்த்தும்
உன் கல்விப் பயணம் தொடரட்டும்
எம் மடி பிஞ்சுகள் பத்திரம்! பத்திரம்!
விவேகமாய் ஜாக்கிரதையாய் சென்று வா..!