போர் வேண்டாம்

மனிதம் விற்று மதி போற்றும்
மக்கள் வேடத்தில் மாக்கள் கூட்டம்
மதம் தன்னை ஆயுதமாய் ஏந்தி
பதம் பிரித்தறியாது பகைமூட்டுவதா ?- நீதி.
சொல், செயல் வேற்றுமை கொண்டு
வில் எடுத்து போரிடுதல் நாற்றம்.
உள்ளத்து உணர்வை உணராத மனிதன்
ஊறு விளைவிக்கும் விலங்கினில் ஒருவன்
தேகத்து குருதி தெருவில் ஓடவிட்டு
அகம் மகிழ்தல் அரக்க செயல்பாடு.
வஞ்சம் தீர்த்து வாஞ்சி பூச்சூட
நெஞ்சம் நினைத்தால் மிஞ்சுவது என்ன?.
பஞ்சம், பசி, பட்டினி, பயம்.
தஞ்சம் புகுந்தோம் புவியில் தற்காலிகமாய்
கொஞ்சம் நினைவுகூர் உண்மை விளங்கும்.

- செஞ்சிக்கோட்டை மா.மணி.

எழுதியவர் : செஞ்சிக்கோட்டை மா.மணி (11-Nov-13, 6:49 pm)
Tanglish : por ventaam
பார்வை : 422

மேலே