மனம்
மனம்
மண் திண்ற குழந்தையாய்
விண்முட்ட ஆசை
ஒளவையின் ஆத்தி சூடி பாடிக் கொண்டே
ஓடி திரிந்த காலம்.
ஆடு தொடா இலையில் மலர் செய்த பருவம்
ஆசைகள் படவும், அறிந்திடாத வயது
கண் மூடி கண் திறக்கையிலே கழுத்தை
நீட்டியது பழுது பழுது
மாங்கல்யம் தந்துனானாவின் அர்த்தம்
புரியும் முன் - தாய் என
முத்திரை பதிந்தது.
ஆசைகளெல்லாம் வெறும் நிராசைகள் ஆனது.
ஊர் உறங்கும் போதெல்லாம்-
.
இன்னும் ஆடிய ஊஞ்சலில்
அசராதிருக்கிறது என் கனவுகள்
மனம் மண் தின்ற குழந்தையாய்-
விண் முட்ட ஆசைகள்
ராணிமோகன்