முதுமையின் கண்ணீர்
ஆதரவில்லை
அழைக்கும் ஆள் வரவில்லை ..
தெருவோர தூக்கம்
இயலாத வயதிலே
முடியாத ஏக்கம் ..
சுகமாய் சுமந்த மகன்
சுமையென்றென்னி
கைவிட்டான்..
மதிகெட்டு,
சாலையில் பரிதவித்து ,
பசியால் துடிதுடித்து
மானம் விட்டு
கையேந்தியும்
ஒரு வாய் சோறு கிட்ட அவலத்தில் ,
நிலைகெட்டு
தடுமாறி போகிறோம் ...
நடைபிணங்களாய்
நடுவீதியில் வாழ்ந்து ,
தெருவோரம்
அனாதைகளாய்
உயிர் விட்டு போகிறோம்.....

