அழுவது என்பதும் இனி ஆண்மையே ----------------அகன்

செடியின் சிம்மாசனத்தில்
சுகமாய் இருந்த என்னை
கவிதையில் எழுதி
என்னை ஏன் பிரித்தாய் ....
மலரின் அழுகை என்னை துரத்தியது...!!

வானவில்லின் வன்ணங்களுள்
வசித்த என்னை
கவிதையில் எழுதி
என்னை பிரித்தது சரியா என
நிறமொன்றின் அழுகை துரத்தியது என்னை...!!!

கண்ணிமைக்குள் நீராய்
வாழ்ந்த என்னை
கவிதையில் எழுதி
என்னை பிரித்து என்ன கண்டாய் என
உழைப்புத் தோள் ஒன்று துரத்தியது என்னை...!!!

தேவாலய ஒலி ஒன்று என் செவிக்குள்..
"என்னிடத்தில் வாருங்கள்
இளைப்பாறுதல் தருவேன்".....

கவிதையில் எழுதினால்
கவலைகள் குறையும்....
களிப்பு நிறையும் ....
களைப்பு மறையும்...
வலிகள் நீங்கும் ....
வாடைகள் மங்கும்....
என்பது
எழுத்துக்கள் அளித்தாலும்
அழுவதென்பது மட்டுமே
இளைப்பாறுதலாய் முழுமையாய்...!!!

அழுவது என்பதும் இனி
ஆண்மையே..!!..

எழுதியவர் : அகன் (15-Nov-13, 1:37 pm)
பார்வை : 94

மேலே