மனத்தைக் கொன்றவன் நா வளர்மதி கருத்துத் திணிப்பு கவின் சாரலன்

வாங்க தாயி வாங்க . எம்புட்டு நாளாச்சு !
எங்களயெல்லாம் மறந்தீட்டீயளோன்னு
நெனச்சேன். ஹியோகசும் எழுத்தும் ஒம்பதாம்
வருஷம் கொண்டாடைகிலையாவது
வந்த்தீயளே ..சந்தோசம் !

கருத்துப் பொட்டியை முடக்கிப் போட்டுட்டா
விட்டுடுவோமா . பொன்னி நெல்லு மாதிரி
பொன்னான கருத்துகள பெரிய பொட்டியில
போட்டுத் தந்திருக்கேன். மச்சியில குதிரில
போடாட்டாலும் வீட்டில மனதில ஒரு
மூலையில போட்டு வையுங்க. உதவத்தான்
செய்யும்

"நெல் பயிர நீ அடிக்கையில
உதுந்து போனது ஏங்கவல,
மகசூலை மச்சியில வச்ச
மச்சானே உன்னை நெனைக்கவச்ச
நெதம் நெதம் நெய்யா என்ன உருகவச்ச ! "

---அருமை அருமை .அருப்புக் களத்துல
அடிச்சுப் பாத்தவன்கலுக்கில்ல தெரியும்
நெல் உதுரர மகிமை . நெல்ல உதிர்த்து
மச்சியில குவிச்சு வெச்சுப்புட்டா மனசுல
கவலை ஒட்டிக்கிட்டா இருக்கும் ? உதிர்ந்துதானே
போகும்

" பருத்திக் காடா மனம் வெடிச்சிக் கெடக்கு
பன்சனையில பாலும் ஆரிக்கெடக்கு
மச்சான் நீயும் பதிஞ்சி கெடக்கிறியே
பட்டணத்துப் பெட்டிக்குள்ள ! "

----நல்லத்தான் சொன்னீய. தொலைக் காட்ச்சிப்
பெட்டியில மனசப் பறிகொடுத்துட்டா
வெள்ளாமை வெளஞ்சு வருது எஞ்ஞன ?
பணம் காசு சேர்ப்பது எப்படி ?
புள்ளகள படிக்க வச்சு ஆளாக்குது எப்புடி ?
புரிஞ்சுக்கடா யேன் ராசா ,கிராமத்து ராசா !

அற்புதமான வட்டார வழக்குக் கவிதை
வாழ்த்துக்கள் வட்டார வழக்கு நாயகி வளர்மதி !

----அன்புடன்,கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (17-Nov-13, 9:09 am)
பார்வை : 93

சிறந்த கட்டுரைகள்

மேலே