ஒரு கோழியின் டைரி

வீட்டுக்கு விருந்தாளி வந்தாலே……!
பகீரென்கிறது மனசு… அய்யோ……! கூரைமீதிருந்த…… காகம் கரைகிறதே…!
இதயத்துடிப்பு இன்னும் அதிகரிக்கிறது..!
நிச்சயம் இன்றைக்கு விருந்தாளி யாராவது வருவாங்க….!
என் சுற்றத்தை சுற்றும் முற்றும் வாஞ்சையடன் பார்க்கிறேன்…!
ஆபத்து நெருங்குகிறது…! இன்று- யாரோ ஒருவர் காலி நிச்சயமாகத் தெரிந்துவிட்டது..!
விருந்தாளி வந்தேவிட்டார்…! வீட்டில் ஏற்பட்ட களேபரத்தின் மூலம் தெரிந்து கொண்டேன்…!
மதியம் வரை… நான் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை…!
விருந்தாளி விடைபெறும்போது ஓரக்கண்ணால் அவரைப் பார்த்தேன் !
அவர்- அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்திருந்தார்….!
நிம்மதி பெருமூச்சுவிட்டபடியே இரையைத் தேடலானேன்..!
இன்னும் உயிர் வாழ…….!
கார்த்திகை மாதம் கை கொடுத்து காப்பாற்றியது