சுதந்திர காற்று
சொல்லாமல் போன - சுதந்திர
காற்றை தேடுகிறேன்,
திசை மாறி சென்ற - உரிமை
சுவாசம் தேடுகிறேன்,
மறைந்ததோ மறைக்கப்பட்டதோ - உண்மை
யாருக்கு தெரிந்ததோ,
வல்லமை கொண்டோம்
வானுழகம் வென்றோம்,
கற்றோம் கற்பித்தோம்
கடலை தாண்டி சிறப்பித்தோம்,
வீரத்தை வாளில் கொண்டு
சிகரம் எட்டி பிடித்தோம்,
சுமைகளை விரட்டியடித்து
சுகவாசிகளை நிருபினோம்,
சூழள்கள் சுட்டெரித்தாலும்
சூழ்சிகள் குழிபரித்தாலும்
சரித்திரம் படைத்தான் தமிழன்.