காலை பொழுது
அழகான அதிகாலை பொழுது
அடர்ந்த மலை மெல்ல மெல்ல
அமைதியாகி கொண்டிருந்தது
அலாரத்தின் ஒலியும் ஓய்ந்தது
இலைகளில் ஒதுங்கியிருந்த
மலை துளிகள் மெதுவாக
தரைநோக்கி விழுந்து கொண்டிருக்கிறது
அதன் ஓசை காதில் விழும்போது
மெல்ல மறைந்துகொண்டிருந்தது என் உறக்கம்
திரையை கலைந்து ஜன்னலை
திரந்தபோது ஆஹா.....
இயற்கை நம் மீது கொண்ட அக்கறைதான் என்ன
இமைகளுக்கு இதமாகவும்
செவிக்கு செல்லமாகவும்
விருந்தளிக்க காத்துகொண்டுறிக்கிறது