தாயின் அனுசரணை
கோபமும் தாபமும் பெற்ற மகளிடமா
ஆத்திரமும் ஆங்காரமும் சொந்த பெண்ணிடமா
செல்வத்தை அவள் உன்னிடம் கேட்கவில்லை
பாசத்தை கொடுப்பதற்கு உனக்கு என்ன தடை.
ஏன் பெற்றாய் என்னை என்று அவள் கேட்கிறாள்
உன் பதிலுக்கு காத்திருக்கிறாள் வெகு காலமாக
அதற்கு தக்க பதில் அளிக்காமல் போய் விட்டாய்
ஏன் என்று தெரியாமல் மயங்குகிறாள் உன் மகள்.