காதல் திருமணம் Vs திருமணம்
காதல் செய்வது தவறல்ல..
அவரை கண்கலங்காமல் பார்த்து கொள்வது அவசியம்.. இயலுமா..?
நாம் ஒன்றும் அமெரிக்காவிலோ, ஐரோப்பிய நாடுகளில் வசிக்கவில்லை. நமக்கென்று ஒரு கலாச்சாரம் இருக்கிறது.
ஏன் சங்க காலத்தில் காதல் கொள்ளவில்லையா என்று கேட்க தோனுகிறதா.. ஆம் செய்தார்கள்.. அவர்கள் காதல் வெற்றிகொண்டது..
அவர்கள் பெற்றோர்களை வருத்தத்தை பற்றியோ, மரணம் பற்றியோ எந்த நூலிலும் இடம் பெறவில்லையே..
அங்கு சாதியம், மதமும் இடன்பெற்றதாக தெரியவில்லை. இன்று அப்படி இருக்கிறதா என்ன.. சதி வெறிப்பிடித்து திரிகிறார்கள் சிலர். பெற்றோர்கள் சம்மத்துடன் நடக்கும் காதல் திருமணங்கள், சங்க கால காதலை போல் உயர்ந்து நிற்கிறது. அவர்கள் சம்மதிர்க்காக காத்திருங்கள்.
பெற்றோர்களை உறவினர் முன்பு அசிங்கப்படுத்தி அவர்கள் அவமானத்தின் மீது உங்கள் வாழ்க்கையை தொடங்க வேண்டுமா என்ன. சற்று யோசிங்கள், உங்களுக்கு பிடித்தவற்றை செய்யும் அவர்களுக்கு, உங்கள் திருமணத்தில் ஆசை இல்லாமல் இருக்குமா. பொறுத்திருங்கள், உங்கள் காதல் வெற்றிக்கொள்ளும்.. ஒரு நிமிடம் நினைத்திர்களா பெற்றோர்களுக்கு சில கனவு இருக்கும், அதை உடைத்து எரிகிறது இந்த காதல்..
காதல் திருமணத்தில் வரும் பிரச்சனைகளை, நண்பர்களோ பெற்றோர்களோ தீர்த்து வைக்க இயலாது.... நீங்கள் மட்டும் தான் தீர்த்து கொள்ள இயலும்.. உங்களுக்கு அந்த பக்குவம் மிக மிக குறைவாக இருக்கும்.. இறுதியில் இருவரும் சிலசமயம் விவாகரத்து வாங்க வேண்டி வரும்..
பெற்றோர் சம்மதத்தில் முடியும் திருமணங்கள் என்றும் பிரியாமல் இணைந்து இருக்கும்...
காதல் திருமணம் செய்துகொண்டு இல்லறம் நடத்தும் நண்பர்களை காயப்படுத்தியாக நினைக்கவேண்டாம். அவர்கள் மனதில் இருக்கும் உண்மையான நிலையும் இதுதான்...
அன்புடன் முனைவர் நந்தகோபால் இராசா....
பட உதவி மைலாஞ்சி.