மாமா பொண்ணு
சின்ன வயசுல...
என்னோட மாமன் பொண்ணு...
விடுமுறைக்கு வருவா என்னை விடுதலை செய்வா..
கண்ணா முச்சி, பல்லாங்குழி, சொப்புபானை சோறு வடிச்சி சக்கரை போட்டு, களிமண்ணு பொம்மை பண்ணி, தென்னன் ஓலை கைகடிகாரம் பண்ணி, கொளத்துல மீனைபுடிச்சி எங்க கெணத்துல விட்டு, கடைசிநாள் அவ போக நான் அழும் நாளு...
அடாடா என்ன காலம் அது.. மறக்க முடியுமா..
எவ்வளுவு பணம் கொடுத்தாலும் வருமா.....
சரி பார்ப்போம் என்னோட குழந்தையும், அவளோட குழந்தையும் எங்களை போல வருமான்னு..
முனைவர் நந்தகோபால் இராசா