குழந்தை
இரண்டணு இணைந்து கரு உருவாகி
கரு மெல்ல வளர்ந்து உயிர் உருவாகி
இதயம் தோன்றி துடிப்பது தாண்டி
உறுப்புகள் தோன்றி உன்னதமாகி
கருவரை இருட்டின் கடினங்கள் தாங்கி
பத்து மாதங்கள் பக்குவமாகி
வெளிச்சம் கண்டு வினோதம் என்று
கூக்குரல் இட்டான் குழந்தையாய் தோன்றி...