எங்கே போகிறது மானுடம்

பிரிவுகளின் ரணச்சூடு
உணர்த்துகிறேன்.... எத்தனை
முறை
தோற்றிருக்கிறாய் என்கிறது
காணாத் தோழமையொன்று...!!!

பெண்ணுரிமை உரக்கப்
பாடுகிறேன்... உன் ஆண்
புனைப்பெயர் அழகாயிருப்பதாய்
மொழிகிறாள்
அறிமுகமில்லாத் தோழி....!!!

சாதிவேற்றுமைகள்
சாடிப் பகர்கிறேன்.... நீ
தலித்துவாயென
வலிந்து தகவல் கேட்கிறது
புதியதாய் ஓர் முகம்
இன்று
மின்னரட்டையில்....!!!

வன்புணர்வுகளுக்கெதிராய்
வாசகமிடுகிறேன்...
எப்பொழுது கற்பழிக்கப்பட்டாய்
விவரம் சேகரிக்கிறது
ஒரு மின்னஞ்சல்....

மானுடமே....
வலிகள் உணர்த்திவைக்க
வேண்டுமெனில்
அவர்களாகத்தான்
இருக்கவேண்டுமா .....?

எழுதியவர் : சரவணா (21-Nov-13, 1:37 pm)
பார்வை : 146

மேலே