தலைவருக்கு ஒரு பிறந்த நாள் கவிதை

அன்பிற்கு அன்பும்
அறத்திற்கு அறமும்
நெஞ்சத்தில் உரமும்
கொண்ட எம் தலைவா !!

சோழர்குலத்தில் தோன்றிய
விடிவெள்ளியே !!
எம் தமிழினத்தின் மைந்தனே
எம் கரிகாலனே !!

எம் இனத்திற்கு - உன்
கண்முன்னே அநீதி நடப்பது கண்டு
துடித்த உன் நெஞ்சு
புயலாகப் புறப்பட்டது
நீதியின் வழிதேடி !!

எம் இனத்திற்கு ஓர் இழிவு
அது என் தாய்க்கான இழிவு
இனியும் பொறுமை காக்க முடியாது
அமைதியாகக் கிடந்தால்
அடிமையாகவே இருந்திடுவோம்
என்று அஞ்சா நெஞ்சுடன்
புத்தகம் சுமக்கும் உந்தன் கையில்
ஆயுதம் துமந்தாய் தலைவா !!
வாடி நின்ற எம் இனத்திற்கு
மழையாக வந்து காத்தாய் !!
அலறிக் கொண்டிருந்த மக்கள்
நிம்மதி பெருமூச்சு விட்டார்கள் !!

எம் இனம்
எம் மொழி -எதுவென
உலகிற்கு உணர்த்தினாய் தலைவா !!
நான் யார் ?
எம் இனம் எப்படிப்பட்டது -உன்னால்
உலகமே எம்மைத் திரும்பிப் பார்த்தது தலைவா !!

திரும்பிப் பார்த்தவர்கள்
பயந்து நடுங்கும் படி
படைகள் கொண்டு
பாரில் எமக்கு ஒரு
பாதையை வகுத்துக் கொண்டாய் !!

கலங்கித்தான் போனார்கள்
உன்னை ( எம்மை )வளரவிட்டால் ...
எம் நிலை என்ன என குழம்பி விட்டார்கள்
சதி செய்து
குழி பறித்தார்கள் !!

காயங்களைக் கண்களில் தரவில்லை
இதயத்தில் தந்துவிட்டார்கள்.
காயமும் ஆறவில்லை
தளம்பும் மறையவில்லை.

எம் விடுதலை உணர்வை
குறைத்து மதிப்பிட்டு விட்டனர்
விழுந்தாலும் எழுவோம்
மீண்டும் மீண்டும் பெருவிருச்சமாக !!

இந்நாள் தலைவா - உந்தன்
பிறந்ததின நன்நாள் - உந்தன்
கனவெல்லாம் நனவாகும்
நன் நாளும் வெகுதூரமில்லை !!
நீ காட்டிய பாதையில் நாம் செல்கிறோம்
நாம் இனியும் செல்வோம்
இது உன்மேல் உறுதி தலைவா !!
இது உன்மேல் உறுதி தலைவா !!

எழுதியவர் : (23-Nov-13, 1:26 pm)
சேர்த்தது : Sugi Viththiya
பார்வை : 14293

மேலே