எண்ணில் என் காதல்
ஒரு நிலவினைக் கண்டேன்
என் இரு கண்களால்...
என் மனதில் நீ கூறிய
மூன்று வார்த்தைகள் மட்டும் ஓட...
உன் பெயரை எழுதினேன்
வீட்டின் நான்கு சுவர்களிலும்...
ஐம்பெருங்காப்பியங்களில் கண்ட
காதல் கூட தோற்றுபோக...
அறுசுவையும் சிரிக்கிறது
உன் பாதம் பட்ட மண்ணை உண்டபோது...
வானவில்லின் ஏழு வண்ணங்களையும் வெறுக்கிறேன்
உன் விழியைக் கண்டபோது...
எட்டுத்திசைகளிலும் உன் குரலைத் தேடிப்
பார்த்தேன்
ஒன்பது கோள்களும் என்னை சுற்றி வர ஆரம்பித்தது ...
என் பத்து விரல்களும் சேர துடித்தது
உன் நினைவுகள் என் உள்ளங்கையில் மலர...

