பூவும் நீயும்
செந்தமிழிலும் படிக்கவில்லை - நீ
செடி வளர்த்த விதம்.
செடியில் பூத்த செம்பருத்தி பூவும்
வெட்கத்தில் சிவக்கிறது - நீ
சேலை கட்டிய அழகை கண்டு !
பூக்களும் தினமும் பூத்து
முயற்சி செய்கிறது - உன்
இரண்டு பூவிழிப் போல் அழகு பெற !
அழகு பெறாத வருத்தத்தில் வாடிவிடுகிறது ?
உன் தலையில் மல்லிகை பூவை கண்ட
ரோஜா கூட்டம், தற்கொலை செய்துக்கொண்டது !
எத்தனை ஆண்டுகாலம் தவம் செய்ததோ !
உன் தோட்டத்தில் பூவாய் பூக்க !!
உன் பூந்தோட்டத்தில் பூத்த
மலரை - நம் மணவறைக்கு கொண்டு வா !
அல்லது
என் கல்லறைகாவது கொண்டு வா .
பூதம் (மரணம்) சென்ற - என்
பூஉடல் புதைக்கும் இடம் - உன்
பூந்தோட்டமாய் இருக்கட்டும் .
பூசெடிக்கு தண்ணீர் ஊற்ற
நீ வரும்பொழுது , எழும்பும்
உன் கொலுசு சத்தம் கேட்டாவது
ஆறுதல் அடைவேன் .