துரோகம்

பொருத்தமற்ற கோபத்தால்
வருத்தம் கொள்ளும்போது
திருத்தம் தேடாமல்
வாதம் பேசாதே...!

சற்று நிதானித்து
பிதற்றும் உன் அறிவை
அடக்கிக்கொள் ...!

பொறுமையிழந்து
உறவுக்கு பஞ்சமடைந்து
வறுமையில் வாடாதே...!


புதைக்கப்பட்ட நட்பு
மீண்டும் துளிர்க்கலாம்.
திணிக்கப்பட்ட துரோகம்
குத்தப்பட்ட அவமான சின்னமாய்...

“போங்கடா நீங்களும்
உங்க நட்பு நாடகமும்”
வெறுத்து பேசிட முடியும்
பொறுத்து பேசுவதால்
நான் கோழையல்ல
எகிறிகுதித்து பேசுவதால்
நீ வீரனுமல்ல.

லட்சம் பணத்தில்
துரோக அவலட்சணம்
காட்டுகிறாய்
விட்டு எறிகிறேன்
எடுத்துக்கொள்
லட்சத்திற்கு லட்சமாய்
வட்டிக்கு வட்டியாய்..

ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்
தாள்களிலும் ...
எனது இரண்டு ஆண்டு
நொடிகளின்
வியர்வை இருக்கும்
தொலைந்த
என் தூக்கங்கள் இருக்கும்.

உனது
இறுதி ஊர்வலத்தில்
பிணத்தை பணம்
சுமக்காது.
என்னை போன்ற
நான்கு சுமைகூலிகளையாவது
சம்பாதித்து கொள்.

முன்னாள் நண்பனே
நீ வாழ்க. !!

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (26-Nov-13, 7:48 pm)
Tanglish : throgam
பார்வை : 9082

மேலே