முதல் சந்திப்பு
நாம் முதலில் சந்தித்த கணம்
உரையாடுவதற்கு மொழிகள் தெரிந்தும்
மௌனம் மட்டுமே மொழியாய்
இருந்தது நம்இருவருக்கிடையில்
இவன் கை கோர்த்து செல்வேனா
என் இன்பங்களை பகிர்ந்து கொள்வேனா
தோள் சாய்ந்து அழுவேனா
வினாடிகள் நிமிடங்கள் ஆவது தெரியாமல்
உரையாடுவோம? இவைகளனைத்தும்
விடைகள் இல்லாக்கேள்விகளாய்
உதித்தன என் மனதில் அக்கணம் ...........