கல்வி வியாபாரம்

கடவுளுக்கு ஒப்பான கல்வி இன்று வியாபாரம் ஆனது..
பணம் பணம்!, தனுக்கு மிஞ்சிய பொருள்
பாடையில் தான் போகும் என்பதை உணருவாயோ மனிதா..

எண்கள் அச்சடித்த காகிதத்துக்கு கொடுக்கும் மரியாதையை கல்விக்கு கொடுப்பாயோ ?
இல்லை பணப்பேய் பிடித்து ஆடுவாயோ?

ஆடுவேன் என்றால் உன் வட்டத்துக்குள் ஆடடா
பொது இடத்தில் அல்ல..
பாதிக்கப்படுவது எம் மக்களடா!..

வரி கட்டு, இல்லையா பாவப்பட்ட பணத்தில் பள்ளிக்கூடம் கட்டு, இலவச கல்வி கொடு!
கல்வியை வியாபாரம் ஆக்காதே ...

எழுதியவர் : Aswini (29-Nov-13, 6:22 pm)
சேர்த்தது : Aswini Dhyanesh
Tanglish : kalvi vyapaaram
பார்வை : 221

மேலே