அவள் போகிறாள்

கன்னச் சிவப்பழகி
கருவிழியாள் போகின்றாள் !
கார்மேகப் பூங்குழலி
கவின் மலராள் போகின்றாள் !
வண்ண உடையணிந்து
வஞ்சியவள் போகின்றாள் !
வாச மலரணிந்து
வான்நிலவு போகின்றாள் !
தங்க நிறத்தழகி
தள தளன்னு போகின்றாள் !
தாழம்பூ வாசம் வீசி
தாமரையாள் போகின்றாள் !
தெம்மாங்குப் பாடலாய்
தென்றலவள் போகின்றாள் !
தேவதையின் மகள் போல
தேன்மொழியாள் போகின்றாள் !
மெல்ல நடை நடந்து
மெல்லிடையாள் போகின்றாள் !
மேகங்கள் நாணம் கொள்ளும்
மேன்மையுடையாள் போகின்றாள் !
வடித்த சிலை போன்ற
வடிவுடையாள் போகின்றாள் !
வானவில் நிறம் குழைத்து
வாடா மலராள் போகின்றாள் !
எண்ணக் காடுகளை
எரித்து விட்டுப் போகின்றாள் !
எல்லாம் அவளென்று
எண்ணம் இட்டுப் போகின்றாள் !